• Oct 09 2024

அடுத்த படத்தின் அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த லெஜண்ட் சரவணன்- vijay- இன் ஸ்டைலை போஃலோ பண்ணியிருக்காரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால், முதலில் தன் கடையின் விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக ஆட்டம் போட்டு பேமஸ் ஆனார்.

இதையடுத்து சினிமாவில் நடிகராக களமிறங்கிய லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்கிற பிரம்மாண்ட படத்தில் நடித்தார். விசில் படத்தை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இப்படத்தை இயக்கி இருந்தனர்.


இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை என்றாலும், ஓரளவு வசூல் செய்தது. இப்படத்தை தொடர்ந்து லெஜண்ட் சரவணன் தன்னுடைய இரண்டாவது படத்திற்காக கதை கேட்டு வருகிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் இரண்டாவது அப்டேட் வெளியாகியுள்ளது. இன்று சுதந்திர தினத்தில் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கியுள்ளார்.அதுமட்டுமின்றி தான் அடுத்த நடிக்கப்போகும் படத்திற்கான கதையை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். 

மேலும் இவரைப் போலவே அண்மையில் நடிகர் விஜய்யும் 10 மற்றும் 12 வகுப்பில் முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement