• May 02 2024

அதிக சம்பளம் வாங்கும் அஜித்... கலாநிதி மாறனுடன் நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படம்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் அவர்களின் துணிவு மற்றும் வாரிசு படங்கள் இந்த வருடம் ரிலீசாகி நடிகர் விஜய் அவர்களின்  படத்தை விட அதிக வசூல் செய்தது. மிகப் பிரமாண்டமாக 200 கோடி செலவில் தயாரித்து,  250 கோடி லாபத்தை பெற்றது. அந்த வகையில் இப்படத்தில் அஜித்துக்கு 70 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து தற்போது இவருடைய 62 ஆவது படமான விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் இவருக்கு ஜோடியாக த்ரிஷா கமிட் ஆகியிருக்கிறார். பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


இதற்கு இடையில் துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தில் இவருடைய சம்பளத்தை 35 கோடிக்கு மேல் அதிகரித்து இருக்கிறார். அந்த வகையில் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளம் 105 கோடி உயர்ந்திருக்கிறது. ஒருவேளை விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவை விட அதிக லாபத்தை வசூலித்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு அதிக சம்பளம் ஏறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 


இந்நிலையில் கலாநிதி மாறன் அஜித்தின் அடுத்த படத்தை தயாரித்தால் கண்டிப்பாக இவருடைய சம்பளம் 170 கோடி வரை தொட்டு விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் மூலம் அஜித் உடைய கேரியர் மட்டும் இல்லாமல் சம்பளமும் அதிகரித்துக் கொண்டே வரப்போகிறது. நடிகர்  ரஜனி மற்றும் விஜய் அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக அதிகமாக இவர் சம்பளம் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement