• May 17 2024

பர்த்டே கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்- வாழ்த்து தெரிவிக்கும் சினிமா திரையுலகம்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அனிருத். இவரின் குரலிற்கு வசியம் ஆகாதவர்களே இல்லை என்றுதான் கூறவேண்டும் . அந்தளவிற்கு தன்னுடைய இசையினால் பலரது மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார். 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்துக்காக அனிருத் இசையில் தனுஷ் பாடிய 'கொலவெறி' என்ற பாடலின் மூலமாகவே அதிக கவனம் ஈர்க்கப்பட்டார் இசையமைப்பாளர் அனிருத். இதனைத் தொடர்ந்து விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

ரஜனியின் ஜெயிலர் ,அஜித்தின் 'ஏகே 62' மற்றும் விஜய்யின் 'தளபதி 67' படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். இவ்வாறு தமிழ் சினிமா நிலவரம் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார் அனிருத்.

இப்படி இளசுகளின் மனதை கவரும் ஹிட் பாடல்களை கொடுக்கும் இவருக்கு இன்று பிறந்தநாள் இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர். 

Advertisement

Advertisement