• May 19 2024

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டேயை ஓவெர்டாக் செய்த ரசிகர்கள்; வைரலாகும் வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இப்படத்தில் உள்ள இரண்டு பாடல்களுக்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடனமாடி இருந்தார்கள். அதில் ஒரு பாடல்தான் அரபி குத்து இந்தப்பாடல் திரைக்கு வருவதற்கு முன்னரே மாபெரும் வெற்றி பெற்றது.திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் அனிருத் இசையில் உருவானது அரபிக்குத்து.

இந்தப் பாடல் வெளிவந்த ஆரம்பத்தில் திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் நடனமாடி தங்களுடைய வீடியோக்களை வெளியிட்டனர். இந்நிலையில் இந்தப் பாடலின் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடனமாடியது போலவே அச்சு அசல் அப்படியே நடனமாடி ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆஹா இது அப்படியே விஜய் மற்றும் பூஜா ஹெக்டே போல இருக்கிறார்களே.. என்று தங்களுடைய கருத்துக்களை கூறி இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவு செய்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement