• Aug 16 2025

சம்பளத்தைவிட ரஜினியுடன் நடித்ததில்தான் மகிழ்ச்சி...!அமீர்கானின் நெகிழ்ச்சி பதிவு....!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

அமீர் கான் நடித்துள்ள தமிழ் படம் ‘கூலி’ குறித்து சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவும் ஒரு செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கூலி படத்தில் நடித்ததற்காக அமீர் கான் ரூ.20 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று நடிகர் அமீர் கான் அதிகாரபூர்வமாக மறுத்துள்ளார்.


 அவர் கூறியதாவது “கூலி படத்துக்காக நான் எந்த வகையிலும் சம்பளம் வாங்கவில்லை. ரஜினி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உள்ளது. அவருடன் ஒரே படத்தில் நடித்ததே எனக்குப் பெரிய சாதனையாகவும், பரிசாகவும் கருதுகிறேன். அதனால் பணம் பற்றிய எண்ணமே இல்லாமல் இந்தப் படத்தில் பணியாற்றினேன்.”


‘கூலி’படம்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமீர் கான் இணைந்து நடித்திருக்கும் எதிர்பார்ப்பு மிகுந்த திரைப்படம். இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. இரண்டு இந்திய திரையுலகச் சிறப்புகளான ரஜினி மற்றும் அமீர் கான் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமீர் கானின் இந்த நடத்தை அவரது தொழில்முறை நேர்மை மற்றும் எளிமையை மேலும் வெளிப்படுத்துவதாகும். ரஜினியுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததே பெரும் பாக்கியம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Advertisement