• May 19 2024

இந்த மாதம் ஷாருக்கான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்- ஜவான் படத்தின் prevue ரிலீஸ் எப்போது தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தை அட்லி இயக்கி உள்ளார். இதன்மூலம் அவர் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இதில் முதன்முறையாக ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். 

மேலும் வில்லனாக விஜய் சேதுபதியும், காமெடியனாக யோகிபாபுவும் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து உள்ளார்.ஜவான் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 


வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி ஜவான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்திற்கான பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

அதன்படி ஜவான் படத்தின் டிஜிட்டல், ஓடிடி, சாட்டிலைட் மற்றும் இசை உரிமை ஆகியவை மட்டும் ரூ.250 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. இதுதவிர இப்படத்தின் திரையரங்க உரிமைகளும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஜவான் படத்தின் prevue இந்த மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement