• Jan 15 2025

ஒவ்வொரு சுற்றிலும் அசத்தும் முத்து ஜோடி.. திடீரென விஜயாவாக பேசிய ஸ்ருதி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், ஸ்ருதி விஜயா, ரவி போல டப்பிங் பேசி அசத்துகின்றார். அதன் பின்பு மீனா கண்ணை மூடிக்கொண்டு பூ கட்ட முத்து அவரை என்கரேஜ் பண்ணி கட்டி முடிக்க வைக்கிறார்.

அதன் பின்பு இரண்டாவது சுற்றில் ஜோடி ஜோடியாக மேடையில் அவர்களுக்கு இடையிலான உணர்ச்சிபூர்வமான பேச்சு இடம்பெறுகின்றது. அதில் மனோஜ் தனது மனைவி தன்னிடம் எதையும் மறைப்பதில்லை என்று ரோகினி பற்றி பெருமையாக பேச, குற்ற உணர்ச்சியில் ரோகினி போதும் என மனோஜின் வாயை மூடி என் மேலே இவ்வளவு லவ் வச்சிருக்க என்று இப்பதான் புரியுது என சொல்கின்றார்.

அதன் பின்பு ரவி ஸ்ருதி தனக்காக எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு வந்தவர் என்று சொல்லியதோடு எனது அப்பாவுக்கு மூன்று குழந்தைகள் அதேபோல நாமும் மூன்று குழந்தைகளை பெற வேண்டும் என சொன்னதும் ஸ்ருதி கோவப்பட்டு அது எப்படி நீ மட்டும் முடிவெடுக்கலாம் என குழம்பி செல்கிறார்.


இதைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் பேசுகையில் இருவரும் ஒருவரின் ஒருவரின் கண்களை பார்த்தவாறு, மீனா தான் தனது கணவரிடம் தனது தந்தையையும் தாயையும் காண்பதாகவும் அவரிடம் பாதுகாப்பை உணர்வதாகவும் உணர்ச்சிபூர்வமாக பேசுகின்றார். மேலும் தனக்கு புருஷன் மட்டும் இருந்தா போதும் என பேச இருவரும் கண் கலங்குகின்றார்கள்.

இதை அடுத்து ஒவ்வொருவரின் சம்பள விபரம் பற்றி கேட்க, அதுலையும் மீனாவும் முத்துவும் அசத்துகின்றார்கள் இதனால் எல்லோரும் கைதட்டுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement