• Jan 19 2025

'அயலான்' ரிலீஸில் வெடித்த புதிய பூகம்பம்! இந்த முறை எஸ்கேப் ஆவாரா எஸ்.கே?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல கோடி செலவில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் அயலான். இத்திரைப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். 

இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

அயலான் திரைப்படம் கடந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப விஷயங்கள் காரணமாக இந்த  ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், கடைசி நேரத்தில் அயலான் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

எனினும், நடிகர் சிவகார்த்திகேயன் எப்படியாவது அயலான் படத்தை ரிலீஸ் செய்யும் நோக்கில் உறுதியாக உள்ளதோடு, அவரே களத்தில் இருந்து அயலான் பைனான்ஸ் பிரச்சினைகளை தீர்க்க போராடி வருவதாக சொல்லப்படுகிறது.

இன்னொருபக்கம் அயலான் ரிலீஸில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அது சொன்னபடி நாளை (ஜன.12) வெளியாகும் எனவும் கூறப்படுகி ன்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement