• Feb 23 2025

எதிர்நீச்சல் சீரியலில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் புது கேரக்டர்..? அடுத்த ட்விஸ்ட்டா??

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில்,தர்சினியை தேடிச் சென்ற நால்வரும் சற்று சோர்ந்தவர்களாய் ஒரு இடத்தில் இளைப்பாறி இருக்க, ஜனனியை போன் செய்து பார்க்குமாறு ஈஸ்வரி சொல்லுகிறார்.

மறுபக்கம் கட்டி போட்டு இருக்கும் தர்ஷினியின் அருகே, ரவுடி ஒருவர் செல்ல, தர்சினி அலறி கத்துகிறார். இதைக் கேட்டு ஏனைய ரவுடிகளும் என்ன சத்தம் என்று ஓடுகிறார்கள்.


இன்னொரு பக்கம், பெண்கள் இருந்த இடத்தில் கொஞ்ச ரவுடிகள் சென்று அவர்களுடன் பிரச்சினை செய்ய, அவர்களும் மரக்கட்டையால் ரவுடிகளுக்கு அடிக்கிறார்கள்.

அந்த நேரத்தில், காரில் இருந்து ஒரு நபர் இறங்குவது போல காட்டப்படுகிறது. எனினும் அது யாரென தெரியவில்லை. இது தான் வெளியான ப்ரோமோ..

Advertisement

Advertisement