• Jan 19 2025

ஷூட்டிங் ஸ்பாட்டில் குளிக்க மினரல் வாட்டர் கேட்ட பிரபல நடிகை! வெளிச்சம் போட்டுக் காட்டிய இயக்குனர்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

இந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. இவரது உறவுக்கார பெண்ணான மீரா சோப்ராவும் ஒரு நடிகை தான்.

தமிழில் எஸ்.ஜே சூர்யா இயக்கி ஹீரோவாக நடித்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் மீரா சோப்ரா ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின்பு லீ, ஜாம்பவான், காளை, ஜெகன் மோகினி, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் மருதமலை படத்தைத் தவிர மத்த படங்கள் எல்லாமே பிளாப் ஆனது. இதனால் தெலுங்கு, கன்னட பக்கம் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அதன் பின்பு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர், 41 வயதில் திருமணம் செய்தார். இவருடைய  திருமணம் கடந்த மார்ச் மாதம்  நடைபெற்றது. அவர் தனது காதலரான தொழில் அதிபர் ரக்‌ஷித் கெஜ்ரிவாலை காதலித்து கரம் பிடித்தார்.

இந்த நிலையில், அவர் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்த போது அவரது குணாஅம்சம் பற்றி பிரபல இயக்குனர் ஒருவர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.


அதாவது ஜாம்பவான் படத்தில் நடித்த போது குற்றால அருவியில் அவர் குளிக்கும் படியான காட்சி ஒன்று படமாக்க முடிவு எடுத்துள்ளார்கள். அதற்காக டேங்க் ஒன்றில் தண்ணீரை நிரப்பி மீரா சோப்ராவை  நடிக்க அழைத்தார்களாம்.

அங்கு வந்த பார்த்த அவர் ஐயையோ இந்த தண்ணீரில் எல்லாம் நான் குளிக்க மாட்டேன் எனக்கு மினரல் வாட்டர் வேணும் என கேட்டு அடம் பிடித்துள்ளார்.

12 ஆயிரம் லிட்டர் பிடிக்கும் அந்த டேங்கில் எப்படி மினரல் வாட்டர் நிரப்புவது என இயக்குனர் கடுப்பாகி உள்ளதோடு அந்த விஷயம் தயாரிப்பாளர் காதுக்கு சென்றுள்ளது. அவர் ஏற இறங்க பார்த்துவிட்டு அப்படியெல்லாம் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால் கோபித்துக் கொண்ட  மீரா சோப்ரா ஷூட்டிங்கை விட்டுக்கிளம்பி சென்று விட்டாராம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement