• Jan 19 2025

ட்ரெண்டிங் அகோரியை கிழித்தது தொங்கவிட்ட ஜிபி முத்து! இதுக்கு ஒரு முடிவு இல்லையா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

யூடியூபில் தனது ஜதார்த்தமான பேச்சினால் பலரை கலாய்த்து தள்ளும் நபர் தான் ஜிபி முத்து. யூடியூப்பில் பயணத்தை ஆரம்பித்து பிரபலமான ஜிபி முத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும்  கலந்துகொண்டிருந்தார். 

பிக் பாஸ் இல் இவர் செய்த பல சம்பவங்கள் இன்றும் மீம்ஸ் டெம்லட் ஆக தொடர்ந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக கமல், ஆதாம் என்று சொன்னதற்கு "ஆதாமா அது யாரு" என்று கேட்டு பங்கமாக கலாய்த்திருப்பார்.

இவ்வாறு பிக் பாஸ் இல் இவருக்கு கிடைத்த வரவேற்பின் பின்பே பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.  விஜய் டிவியில் ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" என்ற ரியாலிட்டி ஷோவிலும் கொண்டு, கோமாளியாக பல நகைச்சுவை விடயங்களை செய்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார்.


இன்னொரு பக்கம், சமீபத்தில் நான் ஒரு அகோரி என கூறி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருபவர் தான் நாட்டுப்புற கலைஞன் கலையரசன். 


இவர் தனது மனைவியுடன் இணைந்து பல நாட்டுப்புற பாடல்கள், நடனங்கள், இசைக்கருவி பிரயோகம் என யூடியூபில் கலக்கி வந்த இவர், திடீரென நான் ஒரு அகோரி என்றும், எனக்கு எதிர்காலம் பற்றி தெரியும் என்றும் , நான் பிணத்தைத்தான் சாப்பிடுவேன் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றார். 

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் அகோரி கலையரசன் பற்றி தாறுமாறாக பேசியுள்ளார் ஜிபி முத்து.

அதாவது, எல்லாரும் அகோரிக்கு உரிய மரியாதையே கெடுக்கிறீங்க. ஒருத்தர் வேசம் போட்டா எல்லாரும் அப்படி போடணுமா? எதுக்குடா இப்படி பண்ணுறீங்க. பிணத்தை திண்டுட்டு போய் சுடுகாட்டுல படுத்து கொல்லுடா...  என கண்டபடி கிழித்து தொங்க விட்டுள்ளார்.

 

Advertisement

Advertisement