• Jan 19 2025

தனுஷின் திரைப்பட வாழ்வில் பெரும் திருப்புமுனை.. 18 ஆண்டுகள் நிறைவா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்திலும் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவிலும் தனுஷின் மிரட்டலான நடிப்பில் வெளியாகிய திரைப்படம் புதுப்பேட்டை. இத் திரைப்படத்தில் சோனியா அகர்வால் மற்றும் சினேகா ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.படத்திற்கான இசையை யுவன் ஷங்கர் ராஜா வழங்க கோலா பாஸ்கர் படத்தொகுப்பில் அன்றைய காலத்தில் படம் புது புரட்சியே எனலாம்.


படத்தின் ஒன் லைனர் புதுப்பேட்டையைச் சேர்ந்த குடிசைவாசி மாணவன் ஒருவன் வடசென்னையில் உயிர் பிழைப்பதற்காக ஒரு பயங்கரமான கேங்க்ஸ்டராக உயரும் கதையைப் பின் தொடர்கிறது.ஒரு வரியில் சொல்வாதாயின் survival of the fittest என்றே கூறிவிடலாம்.படத்தின் மெதுவான வேகத்தை விமர்சகர்கள் சுட்டிக்காட்டினாலும், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


முதல் மூன்று நாட்களில் ஐந்து சென்னை திரையரங்குகளில் இருந்து கிட்டத்தட்ட 27.55 லட்சம் வசூலித்தது, அந்த நேரத்தில் செல்வராகவன் படத்துக்கான சிறந்த ஓப்பனிங்கை புதுப்பேட்டை பெற்றது. ஒரு பெரிய தொடக்கத்தை எடுத்த போதிலும் பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக ஓடியது.


2006 இல் மே 26 ஆம் திகதி வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தின் 18 ஆண்டு நிறைவு நேற்று  கொண்டாடபட்டது. இன்றைய நாளில் வெளியிடப்பட்டிருந்தால் அன்றைய கால வசூலின் பன் மடங்கை பெற்றிருக்கும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டது.ரீ ரிலீஸ் கலாச்சாரம் ஆரம்பமாகியிருக்கும் இந்த காலகட்டத்தில் புதுப்பேட்டை திரைப்படத்தையும் எதிர்பார்த்து நிற்கின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

Advertisement

Advertisement