• Apr 28 2024

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமா..? 50வயதில் 38வயது நடிகரை காதலித்து வரும் நடிகை ஓப்பன் டாக்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை மலைக்கா அரோரா. தமிழ் சினிமாவில் இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'உயிரே' என்ற படத்தில் இடம்பெறும் 'தையா தையா' பாடலில் ரயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆவார். 


இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்து வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பேமஸ் ஆனார். தற்போது 50 வயதை நெருங்கிவிட்ட இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற மகனும் உள்ளார். 

மேலும் கணவருடன் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா. அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் இவர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டார்.


அதுமட்டுமல்லாது தற்போது அவருடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் கபூரை விட மலைகா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வயதை பொருட்படுத்தாமல் காதலித்து வரும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அர்ஜுன் கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமா என்று பலரும் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வந்தனர். 


இதனைத் தொடர்ந்து கடுப்பான மலைக்கா அரோரா, தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய செய்தி உண்மையில்லை என கூறியதோடு, இதுபோன்ற செய்திகளை பரப்பியவர்களை கடுமையாக திட்டியும் இருந்தார். அத்தோடு அர்ஜுன் கபூரும் இது உண்மை இல்லை என்று கூறி இது குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement