விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் வெளியாகியுள்ளது.
இதுவரையில், முத்து - மனோஜ் இடையே வாக்குவாதம் முற்றி இருவரும் அடித்துக் கொள்கின்றனர். இத பார்த்துக் கொண்டிருந்த அண்ணாமலை நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சாய, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.
இன்றைய எபிசோட்டில், 'இப்ப எதுவும் சொல்ல முடியாது. சீஃப் டாக்டர் வரணும். அவர் தான் எதுவா இருந்தாலும் சொல்லணும்' என டாக்டர் சொல்கிறார்.
இதையடுத்து அடுத்த நாள் காலையில் 'நான் கோவிலுக்கு போறேன் நீ வீட்ல இரு. மாப்ள தேடி வந்தாலும் வருவாங்க' என்று சொல்லிவிட்டு மீனாவின் அம்மா வெளியில் செல்கிறார்.
அந்த நேரத்தில், வீட்டில் தனியா இருக்கும் மீனாவிடம் அங்கு வந்த ஒருவர், 'நீ ஹாஸ்பிடலுக்கு போகலயா? உங்க மாமனார் ஹாஸ்பிட்டல்ல இருக்காரு' என்று சொல்ல மீனா பதறி அடித்து ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்.
அங்கு சென்ற மீனா, 'அத்தை மாமாவுக்கு என்ன ஆச்சு? நா அவர பாக்கணும்' என்று சொல்ல, 'உன்னால தான் அவருக்கு இப்படியாச்சு' என முன் நடந்த அனைத்தையும் சொல்லி திட்டுகிறார் விஜயா. அத்துடன் 'அவர நீ பாக்க கூடாது' என மீனாவுக்கு மறுப்பும் தெரிவிக்கிறார்.
அண்ணாமலைய செக் பண்ணி பார்த்த சீப் டாக்டர் 'அவருக்கு ஹாட்ல மூணு பிளாக் இருக்கு அத ஒப்பரேஷன் தான் சரி பண்ணனும்' என்று சொல்ல, 'அதுக்கு எவ்வளவு செலவாகும்' என மனோஜ் கேக்க, 4 லட்சம் செலவாகும் என டாக்டர் சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். அவ்வளவு பணத்துக்கு என்ன செய்றது என எல்லோரும் யோசிக்கின்றனர்.
ஹாஸ்பிட்டல்ல இருந்து கோவிலுக்கு சென்ற மீனா, 'எங்க மாமா ஹாஸ்பிடல்ல இருக்காரு. அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. என்ன பாக்கவும் விடல' என்று சாமியிடம் வேண்டியதோடு, கோவிலில் அங்க பிரதட்சண செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.
Listen News!