• Apr 01 2023

உங்கள் மனதை தவறாக எடை போடாதீர்கள்- லியோ படத்திற்குத் தயாரான சஞ்சய் தத்-ட்ரெண்டாகும் போட்டோ!

stella / 1 month ago

Advertisement

Listen News!

வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் LEO படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி ஆரம்பமாகியது. காஷ்மீரில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிரூத் பணிபுரிகிறார்.இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குநராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.


இந்த படத்தின் வசனங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.


இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் சஞ்சய் தத் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் உடற்பயிற்சி செய்து, "உங்கள் மனதை தவறாக எடை போடாதீர்கள்." என கூறி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை சஞ்சய் தத் பகிர்ந்துள்ளார்.

 இந்த பதிவின் கீழ் நடிகர் LEO என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.விரைவில் சஞ்சய் தத், லியோ படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement