• May 20 2024

15 நாட்கள் சிகிச்சை-பாரதி ராஜா தற்போது எப்பிடி உள்ளார்..? வெளியான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் இருந்த இயக்குநர் பாரதி ராஜா பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான பாரதி ராஜா தன்னுடைய 81 வயதில் கூட மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் தற்போதைய இளம் நடிகர்களின் படங்களில் வயதான தோற்றத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து  சிறப்பாக  நடித்து வருகிறார். சமீபத்தில் மதுரைக்கு சென்ற இவர், அங்கிருந்து சென்னை திரும்ப விமான நிலையம் வந்த போது, விமான நிலையத்திலேயே மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சைக்கு பின் மதுரையில் தங்கி ஒரு நாள் ஓய்வு எடுத்த பின்னர், மறுநாளே சென்னைக்கு திரும்பினார். அத்தோடு தன்னுடைய வீட்டில் ஓய்வில் இருந்த இவருக்கு மீண்டும் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. 



அத்தோடு கடந்த மாதம் 24-ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அஜீரணக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது நிலை உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் இயக்குநர் பாரதி ராஜா இரண்டே நாட்களில் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சென்னை அமைந்தகரையிலுள்ள  எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களிலேயே அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம், யாரும் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என அவரே அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

 கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த பாரதி ராஜா பூரண நலம் பெற்று இன்று பகல் 12;30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது.



முன்பை விட உடல் இளைத்து, கையில் மருத்துவமனை டாக்குடன் சேரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். பாரதி ராஜாவுடன் கலைமாமணி யோகா உள்ளார்.மேலும்  இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement