• Sep 21 2023

மாஸ் காட்டும் ஜவான் படத்தின் Zinda banda பாடல்.. ஒரே நாளில் இத்தனை வியூஸா?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, பிரியா மணி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் மூலம் அனிருத் இந்தியிலும் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்துள்ளார்.

முன்னதாக ஜூன் 3ம் தேதி ஜவான் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதத்திற்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஷாருக்கான் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் தீபிகா படுகோன் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் முன்னதாக வெளியான பதான் படத்தில் ஷாருக்கானின் ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் விஜய் சேதுபதி ஷாருக்கானுக்கு வில்லனாகியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. தமிழில் வந்த இடம் என்று துவங்கும் இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றது. அனிருத் பாடியுள்ள போதிலும் டப்பிங் பாடல் போல இந்தப் பாடல் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே பாலிவுட்டில் இந்தப் பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. Zinda banda என்று துவங்கும் இந்தப் பாடல் ஒரே நாளில் 36 மில்லியன் வியூஸ்களை பெற்று மாஸ் காட்டியுள்ளது. 

யூடியூபிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தப் பாடலில் ஷாருக்கானின் நடனம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பர்ஸ்ட் சிங்கிளே மிகவும் சிறப்பாக அமைந்துள்ள நிலையில், படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே மேலதிக தகவல்களுக்காக காத்திருப்போம்.




Advertisement

Advertisement

Advertisement