• Sep 22 2023

மாடர்ன் உடையில் அசத்தும் எதிர்நீச்சல் ஜான்சி ராணி...புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஜான்சி ராணி. இந்த சீரியலில் குணசேகரனுக்கு டப் கொடுக்கும் விதமாக ஜான்சி ராணி கேரக்டர் இடம் பிடித்துள்ளது. இவரின் நிஜ பெயர் காயத்ரி கிருஷ்ணன். இதற்கு முன்பு இவர் சமீபத்தில் வெளியான அயலி வெப்சீரிஸ் திரைப்படத்தில் மைதிலியின் அம்மாவாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதே சமயம் நடிகர் சிம்பு நடித்த பெரிய அளவில் வெற்றி பெற்ற வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்திலும் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் இவர் குறித்த செய்தியும் இவர் அளித்த பேட்டியும் தான் வைரல் ஆகி வருகிறது. அந்த அளவிற்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்த உடனே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி கிருஷ்ணன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement