• Mar 08 2026

ஒரே பாத் டப்பில் ஒன்றாக குளியல் போட்ட ஜீ தமிழ் பிரபலங்கள்.! வீடியோ வைரல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கில்லாடி ஜோடி நட்சத்திரங்களாக பிரபலமானவர்கள் தான் கூமாபட்டி தங்கபாண்டியும், சாந்தினியும்.. தற்போது அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள், இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

பொதுவாக செலிபிரிட்டிகள்  சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  அதன்படி கில்லாடி ஜோடி நிகழ்ச்சியின்  மொத்த குழுவினரும் ஸ்பெஷல் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார்கள். அந்த நிகழ்ச்சிக்கான டாஸ்க் ஒரு புறம் நடைபெற்றாலும் கூமாபட்டியும் சாந்தியும்  அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றனர். 

அதற்கு காரணம் அங்குள்ள சொகுசு விடுதி ஒன்றில் அவர்கள் இருவரும்  பாத் டப்பில் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்து உள்ளது தான்,  அவர்களுடைய கெமிஸ்ட்ரி வேற லெவல் ஒர்கவுட் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோ இவர்களுடைய நெருக்கத்தை இன்னும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 


இதைப் பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே இவர்கள் லவ் பண்றாங்களோ என்ற கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.  அந்த வீடியோவில் இருவரும் ஒரே பாத் டப்பில் அமர்ந்து உள்ளனர்.  தற்போது இவர்களுடைய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்று மக்களின் வரவேற்பை பெற்றனர். இவர்களுடைய  நெருக்கமும் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களுக்கு பிடித்ததாக மாறியது.  இந்த ஜோடி திரைக்கு வெளியேயையும் மிகச் சிறந்த நண்பர்களாக வலம் வருகின்றமை குறிப்பிடப்பட்டது ,

Advertisement

Advertisement