• Mar 08 2026

ஜெகன் மோகன் ரெட்டி குடும்ப திருமணத்தில் விஜய், சூர்யா, கார்த்தி – இணையத்தில் வைரல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது உறவினரின் மகன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார். 

இந்த திருமண விழாவில் குடும்பத்தினர் மட்டுமின்றி, அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

அந்த வகையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்களுக்கிடையிலான உரையாடல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


இதனைத் தொடர்ந்து, இந்த திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து பேசிக்கொண்ட காட்சிகள், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒரே மேடையில் அரசியல் தலைவருடன் கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சினிமா – அரசியல் நட்புறவு மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement