• May 19 2024

விக்ரம் படத்தை 50 தடவை பார்த்து புதிய சாதனை படைத்த இளைஞன்- லிங்கன் புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளாராம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உதய பாரதி எனும் இளைஞர் விக்ரம் படத்தை 50 தடவை தியேட்டரில் பார்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.

விஸ்வரூபம் 2 படத்தின் தோல்விக்கு பிறகு இந்தியன் 2 படத்தை கமல் ஆரம்பித்தார். ஆனால், அந்த படம் தயாரிப்பு பணிகள் காரணமாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விக்ரம் என்னும் படத்தில் நடித்தார்.


இப்படத்தில் இவருடன் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் வசூலிலும் 400 கோடிக்கும் மேல் பெற்றதோடு உலக அளவில் நல்ல விமர்சனத்தைப் பெற்றது என்பதும் யாவரும் அறிந்ததே.

அத்தோடு விக்ரம் படம் 100 நாட்கள் தியேட்டரில் ஓடி மற்றொரு சாதனையும் சமீபத்தில் படைத்தது. செல்லும் இடமெல்லாம் விக்ரம் படத்தின் மூலம் கமலுக்கு மேலும், புகழ் வெளிச்சமும் பாராட்டுக்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அந்த படத்தை பார்த்தே இளைஞர் ஒருவர் சூப்பர் சாதனை படைத்துள்ளார்.


உதய பாரதி எனும் இளைஞர் விக்ரம் படத்தை 50 முறை தியேட்டரில் பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனை லிங்கன் புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பிடித்திருக்கிறது. வெளிநாடுகளில் தான் இதுபோன்ற சாதனைகளை கேள்விப் பட்டு வந்த நிலையில், கமல் ரசிகர் ஒருவரே இப்படியொரு சாதனையை படைத்திருப்பது ரசிகர்களை குஷியடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement