• Jan 19 2025

நீங்க கன்பியூஸ்ல இருக்கலாம்.. பட் ஐ அம் பேக்..! அடுத்து இது தான்? ட்விஸ்ட் வைத்த ரேஷ்மா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் சீதாராமன். 

ஆரம்பத்தில் பிடிக்காத திருமணத்தை சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்து அடிக்கடி மோதலில் ஏற்பட்டு வரும் கதாநாயகன் கதாநாயகி, அதற்குப் பிறகு எவ்வாறு காதலித்து தமது வாழ்க்கையை கொண்டு சென்றார்கள் என்று விறுவிறுப்பாக நகர்ந்து வந்தது.

இடையில் இந்த சீரியலின் வில்லியான மகாலட்சுமியால், சீதா அனுபவிக்கும் துன்பங்களையும், அதிலிருந்து அவர் மீண்டு வந்த  காட்சிகளையும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இந்த சீரியலை கொண்டு சென்றிருப்பார்கள்.

எனினும் இடையில் இந்த சீரியலில் வில்லியாக இருந்த மகாலட்சுமி உயிரிழந்துள்ளார். இதனால் சற்று சுவாரஸ்யம் குறைந்ததாகவே இந்த சீரியல் பார்க்கப்பட்டது.


இந்த நிலையில், தற்போது சீதாராம் சீரியலில் வில்லியாக நடித்த ரேஷ்மா புஷ்பா ரெட்டி பேட்டி  ஒன்றை வழங்கி, சீதாராம் சீரியல்  ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். அதன்படி அவர் வழங்கிய பேட்டி வருமாறு,

உங்களுக்கு எல்லாருக்குமே ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு ஒரு ஷார்ட் பிரேக் எடுத்தேன். பட் ஐ அம் பேக்... நீங்க கன்பியூஸ்ல இருக்கலாம்..

மகாலட்சுமிய யாரு சாவடிச்சாங்க.. சாவடிக்க ட்ரை பண்ணினாங்க.. ஆனா அவங்க உயிரோட வர யாராவது ஹெல்ப் பண்ணி இருக்கலாம்.. அவங்க பிரதர் கூட ஹெல்ப் பண்ணி இருக்கலாம்.. சொல்ல முடியாது.


இதுல. குற்றவாளி யார் அப்படின்னு கண்டுபிடிக்கிறது அதுக்கு ஏத்த மாதிரி இன்னும் நிறைய சீக்வென்சஸ் எல்லாம் வருது..

சில பேருக்கு என்ன பிடிக்கும் சில பேருக்கு பிடிக்காது. ஆனாலும்  நல்ல சப்போர்ட் பண்ணுறீங்க..தேங்க்யூ சோ மச் 

இந்த சீரியல்ல கதை இன்னும் ரொம்ப அழகா எடுத்துட்டு போறாங்க..

என்ன சீரியல்ல பாத்ததும் நிறைய பேரு ஷாக் ஆயிட்டாங்க.. மகாவா இல்ல இது வேற ஒரு கேரக்டரான்னு... இன்னும் சப்போர்ட் பண்ணுங்க. இனி இந்த சீரியல்ல நிறைய திருப்பம் இருக்கு என்பது போல சொல்லியுள்ளார்.




Advertisement

Advertisement