• Feb 05 2026

நீயெல்லாம் ஒன்னத்துக்கும் லாய்க்கில்ல.. மகனின் மானத்தை வாங்கிய மன்சூர் அலிகான்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சமீப காலமாக தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூகப் பொறுப்பை எடுத்துக் கொள்வது ஒரு வழக்கமான சம்பவமாகி வருகிறது. இதில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், ரசிகர்களையும் சமூக வலைத்தளத்தையும் அதிர்ச்சிப்படுத்தியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல நடிகர் மன்சூர் அலிகான், மேடையில் பேசிய போது, தனது மகனின் மானத்தை வாங்கும் வகையில் பேசியுள்ளார். 


அவர் அதன்போது, “தன் மகனை அழைத்து இவங்கெல்லாம் எவளோ கஷ்டப்படுறாங்க பாருடா.. எப்ப பார்த்தாலும் போன்லயே இருக்கிறீயே... ஒன்னத்துக்கும் லாய்க்கில்ல.. சும்மா தண்ட சோறு சாப்பிட்டுக் கிட்டு எவ்வளோ திட்டினாலும் உறுப்பிட மாட்டான். அப்பா கூட வந்தா ஜாலியா இருக்கும்னு நினைச்சியா.? இப்படி மானத்தை வாங்கிட்டேன்னு கோவிச்சுக்கிட்டா இனி போனை தொட கூடா..” என்று கூறியுள்ளார். 

மன்சூர் அலிகான் மேடையில் பகிர்ந்த அனுபவம், சமூக வலைத்தளங்களில் விரைவில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement