• Jun 04 2023

யோகிபாபுவும் சூரியும் மோசமானவர்கள் அவர்களுக்கு யாராவது வந்து விடுவார்கள் என்று பயம்- விளாசித் தள்ளிய பிரபல நடிகர்

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

யோகி பாபுவும், சூரியும் ரொம்ப மோசமானவர்கள் என்று நடிகர் டெலிபோன் ராஜ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் மீடியாவில் காமெடி நடிகராக இருந்தவர் டெலிபோன் ராஜ். இவர் பெரும்பாலும் வடிவேலு குழுவுடன் இணைந்து தான் படத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு இவர் முன்னால் டெலிகாம் பணியாளரும் ஆவார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராஜ் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் பயில்வான் ரங்கநாதனை திட்டி பேசினால் கூட சோசியல் மீடியாவில் என்னை பேசினால் திட்டி பேசுவார்கள். அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். முதலில் அவர் பேசுவது உண்மை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது பிழைப்புக்காக தான் அவர் இதை செய்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். 


இருந்தாலும், அவர் பேசுவதை பார்க்க ஒரு கூட்டம் இருக்கிறது. மேலும், youtube இல் கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசுபவர்களுக்கு தான் ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நான் எதுவும் சம்பாதிக்கவில்லை. என்னிடம் மூன்று கார்கள், சொந்த வீடு தான் இருக்கிறது. இது எல்லாமே நான் டெலிபோன் டிபார்ட்மெண்டில் இருந்து சம்பாதிக்கும் போது வாங்கியது. சினிமாவில் நான் எதையும் சம்பாதிக்கவில்லை.

வடிவேலுக்கு முன்னாடி வரை என்னை எவருக்கும் தெரியாது. அவருடன் நடித்த பிறகுதான் எனக்கு அடையாளம் கிடைத்தது. அதனால் நான் அவரை எப்போதும் விமர்சனம் செய்ய மாட்டேன். அவரை ஒருவர் உதவி பண்ணினால் அந்த நன்றியை மறக்கக்கூடாது. இனி அவர் வாய்ப்பு கொடுப்பார் என்பதற்காக நான் அவருக்கு ஜால்ரா போடவில்லை. இதுக்கு முன் அவர் கொடுத்த வாய்ப்புக்காக தான் நான் அவர் புகழ் பாடுகிறேன்.  ஒரு முறை கத்தி சண்டை படம் பார்த்துவிட்டு வடிவேலுவை, என்னென்ன சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? ஏன் அதில் போய் நடித்தீர்கள்? என்று திட்டினேன். 


அதற்கு அவர், விட்டுவிடு அடுத்தது விஜய் சார் கூட அட்லீ இயக்கத்தில் மெர்சல் பண்ணுகிறேன். உனக்கும் சொல்லுறேன் என்று கூறினார். இளைய தலைமுறை இயக்குநர்கள் அவர்கள் விருப்பப்படி தான் இருக்கிறார்கள். விஜய் டிவியில் இருந்து எத்தனை பேர் காமெடிக்கு வந்தானோ எவனாவது ஒருவரை மேல தூக்கி விட்டு இருக்கானா? யோகி பாபு, சூரி கஷ்டப்பட்டு மேலே வந்தாங்க.


அதில் வருத்தம் இல்லை. எத்தனையோ நடிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களை கூப்பிட்டு யோகி பாபு, சூடி வாய்ப்பு தரலாம். தன் வாழ்நாளில் சூரி ஒருத்தருக்கு கூட பரிந்துரை பேசியது  கிடையாது. யாருக்காவது வாய்ப்பு கொடுத்தால் நம்மை மிஞ்சி விடுவார்களா என்று யோகி பாபுவும், சூரியும் பயப்படுகிறார்கள். மதுரையில் ஒரு பத்து ஹோட்டல் வைத்திருக்கும் சூரி ஒருவருக்காவது உணவு கொடுத்திருக்கிறாரா? என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement