• Oct 09 2024

வார இறுதி நாளில் மட்டுமே 'ஜெயிலர்' திரைப்படம் செய்த வசூல்... இத்தனை கோடியா..? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாத் துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்றிருந்த நெல்சனுக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிஇருந்தது. ஜெயிலர் படம் ரஜினி, மற்றும் நெல்சன் இருவருக்குமே சிறந்த கம்பேக் கொடுத்துள்ளது. இதனால் படக்குழுவினர் செம குஷியில் உள்ளனர்.


இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை பெற்றுள்ள வசூல் விபரத்தினைப் பார்ப்போம். அந்தவகையில் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலை நெருங்கியதோடு, இரண்டாம் நாள் முடிவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

அதனையடுத்து பின்னர் மூன்றாம் நாள் முடிவில் ரூ.220 கோடியையும் வசூலித்திருந்தது. அதுமட்டுமல்லாது நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்றைய தினம் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது.


இதன் வாயிலாக விஜய் நடித்த வாரிசு படத்தின் லைஃப் டைம் கலெக்‌ஷனை ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நான்கே நாட்களில் முறியடித்து இருக்கின்றது. மேலும் இந்த 4நாட்கள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடியையும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.32 கோடியும், கேரளாவில் ரூ.23 கோடியும், கர்நாடகாவில் ரூ.27 கோடியும், இதர மாநிலங்களில் ரூ.6 கோடியும், வெளிநாடுகளில் மட்டும் ரூ.135 கோடியையும் வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement