• May 07 2024

என்னம்மா இந்த ட்ரெஸ்…ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படுகவர்ச்சி காட்டியா யாஷிகா..வைரல் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தனது முதல் பயணத்தை ஆரம்பித்தார். இதில் அவர் பகிர்ந்த கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் பிரபலமான யாஷிகா 2015ல் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான் படத்தில் திரையை பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாததால் யாஷிகாவின் பாத்திரம் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதன் பின்னர் கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்றுளராக நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் 16 திரைப்படம் யாஷிகாவிற்கும் சரியான தீர்ப்புமணியை கொடுத்தது. மேலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதை தொடர்ந்து தம்பி ராமையாவின் மணியார் குடும்பம், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் யாஷிகாவின் தோற்றம் இளசுகளை பெரிதும் கவர்ந்தது.

அத்தோடு 2018 ஆம் ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் இரண்டாம் சீசனில் இவர் கலந்து கொண்டார். குட்டை டவுசருடன் வலம் வந்த இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். அந்த நிகழ்ச்சியில் இறுதி வாரம் வரை இருந்த யாஷிகா 98 வது நாளில் வெளியேற்றப்பட்டார். இருந்தும் ஐந்தாவது இடத்தை பிடித்த பெருமை இவரை சேர்ந்தது என்று தான் கூற வேண்டும்.

அத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜாம்பி என்ற அனிமேஷன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தொலைக்காட்சியிலும் தோன்றிய இவர் சென்னை டைம்ஸுக்காக பாராட்டுகளை பெற்றிருந்தார். 2012 ஆம் ஆண்டில் மீடு பிரச்சாரத்தின் போது இது போன்ற பாலியல் தொந்தரவுகளுக்கு தான் ஆளாக்கப்பட்டதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

இதற்கிடையே அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்தது வரும் யாஷிகா கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கிக்கொண்டார். அத்தோடு இரவு பார்டியில் கலந்துகொண்டு மகாபலிபுரத்திலிருந்து திரும்பிய போது அவரது கார் பாலத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதனால் இவருடைய கால்கள் பலத்த காயமடைந்தன.

சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய யாஷிகா தொடர்ந்து குதூகலமான புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இந்நிலையில் வெள்ளை உடையில் படு கவர்ச்சியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement