• Apr 25 2024

என்னை யாரும் அப்படி அழைக்காதீங்க- பெயரை மாற்றிய அஜித் பட நடிகை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் அதிக படம் நடிக்காவிட்டாலும் தான் நடித்த ஒரு சில படஙகள் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

யூ டர்ன், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்து உள்ளார். தற்போது கைவசம் மூன்று படங்கள் வைத்து இருக்கிறார் என கூறப்படுகின்றது.

அத்தோடு ட்விட்டரில் நீண்ட காலத்திற்கு பின்னர் பதிவிட்டு இருக்கும் அவர் தனது பெயர் ஒரு ட்விட்டர் கணக்கில் ஷரத்தா தாஸ் என தவறாக குறிப்பிட்டு இருக்கின்றனர் என்பதை குறிப்பிட்டு தன்னை அப்படி யாரும் அழைக்காதீர்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும் தனது பெயரை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என மாற்றிவிட்டதாகவும் அவர் கூறி இருக்கிறார். ரமா என்பது என் அம்மா பெயர்.

அதை இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இருக்கிறேன், விரைவில் ட்விட்டரிலும் மாற்றி விடுகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement