• Apr 14 2026

எம்ஜிஆரிடம் ஏமாந்தது போல.. விஜய்யிடம் ஏமாந்திடாதீங்க.! திருப்பூர் MLA செல்வராஜ் பகீர்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் திருப்பூர் தெற்கு MLA செல்வராஜ் ஒரு செய்தியாளர் சந்திப்பில், புகழ்பெற்ற நடிகர் விஜய் நடித்துள்ள படங்களைச் சுட்டிக்காட்டி, குழந்தைகள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கருத்து தெரிவித்தார்.


செல்வராஜ் தனது பேச்சில், " விஜய் பறந்து பறந்து 50 பேரை அடிக்கிறார், ஸ்டாலினால் முடியவில்லை என்கிறீர்கள். ஆமாம் ஸ்டாலினால் முடியாது தான். ஆனால் விஜய் படத்தில் அடிப்பதற்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறார். 

படம் பார்க்கும் குழந்தைகள் இதன் மூலம் எளிதாக ஏமாந்து விடுகின்றனர். சினிமாவை பார்த்து எம்ஜிஆரிடம் ஏமாந்தது போல விஜய் இடம் ஏமாந்து விடாதீர்கள்." என்று கூறியிருந்தார். 


விஜய் தற்பொழுது அரசியலில் தனது ஆற்றலை நிலைநிறுத்திக் கொண்டு வருகின்ற நிலையில்,செல்வராஜ் இவ்வாறு கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்துடன் செல்வராஜ் பேச்சுக்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement