• Oct 04 2024

கோலிவுட் சினிமாவில் இந்த மாதம் தொடர்ந்தும் சரவெடி தானா? அடுத்த அப்டேட்டுகள் இதோ..

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து பிரபல நடிகர்களின் படம் ரிலீஸ் ஆக உள்ளது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையிலேயே சூப்பர் ஸ்டாருக்கு உடல்நிலை குறைவால் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இன்றைய தினம் அவர் பரிபூரணமாக குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது அக்டோபர் மாதம் என்னென்ன படங்கள் வெளியாகஉள்ளன, மேலும் கோலிவுட் சினிமா பற்றிய புதிய புதிய அப்டேட்டுக்கள் என்னென்ன வெளியாகியுள்ளன என்பன பற்றி  விரிவாக பார்ப்போம்.

அதன்படி அக்டோபர் 2ம் திகதி வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.


அதேபோல சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் கங்குவா படத்தின் இரண்டாவது சிங்கிள் மற்றும் ட்ரெய்லர் இந்த மாதம் வெளியாக  உள்ளது.

இதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் தயாராகும் கங்குவா  படத்தின் அப்டேட் இந்த மாதம் வெளியாக உள்ளதோடு, சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவலும் அப்டேட் ஆக உள்ளது. அதேபோல தனுஷ் நடிப்பில் தயாராகும் குபேரா படத்தின் ஷூட்டிங் அப்டேட்டும் இந்த மாதம் தானாம்.

மேலும், இளைய தளபதி விஜய் நடிக்கும் தளபதி 69 படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்புகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதேபோல அஜித் நடிப்பில் தயாரான விடாமுயற்சி படத்தின் வீடியோ கிளிம்ஸ் இந்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. 

இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள புறநானூறு படத்தில் அப்டேட் விரைவில் இந்த மாதத்திற்குள்ளேயே வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement