• Mar 28 2023

அருந்ததி படத்தில் குழந்தை நட்சத்திரமா நடித்தவாரா இவர் ?- வளர்ந்து வேற லெவல் அழகில் ஜொலிக்கின்றாரே

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அருந்ததி. இந்தத் திரைப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.இந்த திரைப்படத்திற்குப் பின்னர் தான் அனுஷ்காவிற்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


 அருந்ததி படத்தில் அனுஷ்காவைப் போல அருந்ததியாக நடித்த குழந்தை நட்சத்திரம் தான் திவ்யா நாகேஷ். இவர் மும்பையில் பிறந்தவர், தனது சிறு வயதிலேயே சென்னையில் வந்து செட்டில் ஆனார், திருச்சியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் படிக்கும் பொழுது அண்ணனுடன் கிரிக்கெட் கோச்சிங் சென்றுள்ளார்,அந்த விளையாட்டு மைதானத்தில் தான் இந்த நடிகையின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது


 அந்த மைதானத்தில் தான் ஒரு தெலுங்கு திரைப்பட ஷூட்டிங் நடந்த வந்தது.இந்த நேரத்தில் தான் இந்த தெலுங்கு பட நடிகைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது அப்போது திவ்யாவை பார்த்த தெலுங்கு சீரியல் இயக்குநர் நடிக்க சம்மதமா என கேட்டுள்ளார் தொடர்ந்து திவ்யாவின் பெற்றோரிடமும் அவர் சம்மதம் வாங்கினார், பின்பு தெலுங்கு மற்றும் தமிழ் விளம்பர படங்களில் நடித்து வந்தார்,தமிழில் அந்நியன் படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்திருந்தார்.


குழந்தை நட்சத்திரமாக  40 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என்ற எதிர்பார்த்த நிலையில் சரியான படவாய்ப்புக்கள் அமையாததால் திரைத்துறையில் இருந்து சிறிது காலம் விலகியுள்ளார். இந்த நிலையில் இவரின் இள வயதும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அதற்குள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.










































 


Advertisement

Advertisement

Advertisement