• Jul 19 2026

சத்யா - ரேகா திருமணம் நடக்குமா? போட்டுக் கொடுத்த விஜயா.! சிறகடிக்க ஆசையில் புதிய திருப்பம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை தொடரில் அடுத்த வார எபிசோட்கள் குறித்து புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, பாட்டியின் ஊரில் வைத்து சத்யாவுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடத்த வேண்டும் என்பதில் முத்து மற்றும் மீனா தீவிரமாக செயல்படுகின்றனர். இருவரும் சேர்ந்து திருமண ஏற்பாடுகளை மும்முரமாக முன்னெடுக்கின்றனர்.

இந்நிலையில், இந்த திருமணத்திற்கு வந்திருந்த விஜயா, அதை சிந்தாமணியிடம் போட்டுக் கொடுக்க திட்டம் தீட்டுகிறார். அதன்படி, திருமண நிகழ்வை தன்னுடைய போனில் பதிவு செய்யவும் அவர் முயற்சிக்கிறார்.


அதன்படி திருமணம் நடைபெறும் தகவலை அறிந்த சிந்தாமணி கடும் அதிர்ச்சியடைந்து, தனது கணவருடன் உடனடியாக திருமண நிகழ்விடத்திற்கு விரைந்து செல்கிறார். அங்கு நிலைமை பரபரப்பாக மாறி, வாக்குவாதம் மற்றும் மோதல் சூழ்நிலை உருவாகிறது.

இந்த ப்ரோமோ வெளியாகியதை தொடர்ந்து, சத்யா–ரேகா திருமணம் உண்மையில் நடைபெறுமா அல்லது சிந்தாமணி அதை தடுத்து நிறுத்துவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அடுத்தடுத்த எபிசோட்களில் இந்த திருமண திருப்பம் எவ்வாறு நகரும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement