• Mar 08 2026

ஷார்ட்ஸ் பார்க்கும் காலத்தில் எதற்காக நடிக்கிறோம்.? வைரலான சரத்குமாரின் பேட்டி.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இன்றைய சினிமா உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாகவும் சுவாரஸ்யமாகவும் பேசினார். குறிப்பாக, ஷார்ட்ஸ், ரீல்ஸ், OTT எனப் பல்வேறு தளங்களால் இந்த காலகட்டத்தில் நடிகர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த பேட்டியில் அவர் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரிடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, " ஷார்ட்ஸ் பார்க்கும் கலாசாரம் வந்துவிட்டது. இப்போது எதற்கு நடிப்பது என தெரியவில்லை. ஷார்ட்ஸுக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா, டிவிக்கு நடிப்பதா, ஓடிடிக்கு நடிப்பதா, தியேட்டருக்கு நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. இந்த குழப்பம் எந்த நடிகருக்கும் தேவை இல்லை. எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்பு தான். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். '' என்று தெரிவித்தார்.

இந்த வார்த்தைகள் பல இளம் நடிகர்களுக்கு ஒரு ஆறுதல் மற்றும் வழிகாட்டல் போல அமைந்துள்ளது. தளம் எதுவாக இருந்தாலும், ஒரு நடிகரின் அடிப்படை வேலை நடிப்பு தான்; அது மாறப்போவதில்லை என்பதே அவரது கருத்து.

Advertisement

Advertisement