• Mar 08 2026

எங்க தாத்தா சுதந்திர போராட்ட வீரர்.! அதனால தான் அப்பாவும்... மனம் திறந்த அர்ஜுனின் மகள்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல், சமூக பொறுப்பும் தேசப்பற்றும் கொண்ட நடிகராக அறியப்படுபவர் நடிகர் அர்ஜுன். அவரது குடும்பத்திலும் தேசப்பற்று தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது என்பதை அவரது மகள் ஐஸ்வர்யா சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பகிர்ந்துள்ளார்.

அந்த நேர்காணலில், தன் தாத்தாவிடம்  உள்ள தேசப்பற்று குறித்து பேசிய ஐஸ்வர்யாவின் கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரையும் உணர்ச்சி வசப்படுத்தி வருகிறது.


ஐஸ்வர்யா அர்ஜுன் பேட்டியின் போது," எங்க தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர், அதோட பேறு தான் எங்க அப்பா கிட்ட இருக்கிற தேசப்பற்று. அவர் கைல போட்டு இருக்க தேசிய கொடி டாட்டூ கூட கேனடா நாட்டில போட்டது. அத முதன் முதலில பார்க்கும் போது, எனக்கு அவ்ளோ பெருமையா இருந்திச்சு. தேசப்பற்று என்பது தனி பற்று இல்ல அது எல்லா இந்தியனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை உணர்வுனு அப்பா சொல்லுவார்." என்று கூறியுள்ளார். 

இந்த கருத்துகள், அவர்களது குடும்பம் தேசத்தின் மீது எவ்வளவு மரியாதை மற்றும் அர்ப்பணிப்புக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. 

Advertisement

Advertisement