• May 04 2024

விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் தெரியுமா? அந்த நடிகைக்கு வயது இவ்வளவு தானா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அத்தோடு இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.மேலும் கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.

இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக வீடியோவை அண்மையில் வெளியிட்டிருந்தனர். அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.

விக்ரம் படத்தின் ஹீரோயின் யார் என்பதை லோகேஷ் சொல்லவே இல்லை. இந்நிலையில் தான் ஃபிளாஷ்பேக்கில் கமலுக்கு ஒரு ஜோடி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஃபிளாஷ்பேக்கில் கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா. அவர் 10 நிமிடம் வருவாராம். ஃபிளாஷ்பேக்கில் 30 வயது வாலிபராக வருகிறாராம் கமல். அவரை இளமையாக காட்ட ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார்களாம். அதற்கு மட்டுமே ரூ. 10 கோடி செலவாம் என குறிப்பிடப்பட்டது.

மேலும் ஷான்விக்கு 29 வயது தான் ஆகிறது. ஃபிளாஷ்பேக்கில் கமலுக்கு 30 வயது என்பதால் அவரை விட ஒரு வயது குறைவான நடிகையை தேர்வு செய்திருக்கிறார்கள் போன்று என விமர்சனம் எழுந்துள்ளது. படத்தில் விஜய் சேதுபதிக்கும் ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கும் என்று கூறப்படுகிறது.

விக்ரம் படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. படப்பிடிப்பு மார்ச் மாதம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ட்ரெய்லரை விரைவில் வெளியிடவிருக்கிறார்கள்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement