• Apr 07 2026

அல்லு அர்ஜுன் - அட்லீ இணையும் படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது தெரியுமா.?

shali / 4 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரமான அல்லு அர்ஜுன் தனது 22ஆவது படத்தின் மூலம் உலகளாவிய அளவில் பெரிய சாதனை செய்ய தயாராகி வருகிறார். பான்-வேர்ல்டு படமாக உருவாக இருக்கும் இந்தப் படம், சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ளது.


இந்தப் படத்தை கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய அட்லீ இயக்குகிறார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும், பிரபல தயாரிப்பு நிறுவனமான Sun Pictures இப்படத்தை தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இவரின் இசை இந்தப் படத்திற்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தின் தலைப்பு (Title) நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டைட்டில் வெளியீட்டை எதிர்நோக்கி அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement