• Apr 28 2026

இது கிழிந்த ஆடையா.? இல்ல லக்சரி ஃபேஷனா.? அல்டிமேட் ஸ்டைலில் என்ட்ரி கொடுத்த அக்ஷய் குமார்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழும் அக்ஷய்குமார் 58 வயதை கடந்த போதும் சிக்ஸ் பேக் உடல் கட்டோடு மாஸாக வலம் வருகின்றார். இவர் தனது பிட்னஸின் ரகசியத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இவர் பாலிவுட்டின் கில்லாடி என்று  ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனது வழக்கமான நேர்த்தியான உடையை மாற்றி ஜென் Z தலைமுறையின் "டிஸ்ட்ரெஸ்ட்"  லுக் உடையில் சென்றுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அக்ஷய் குமார் நடிப்பில் வரவிருக்கும் 'பூத் பங்களா' திரைப்படத்தின் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷய், கிழிந்த கருப்பு ஸ்வெட்ஷர்ட், லைட்-வாஷ் ரிப்ப்ட் ஜீன்ஸ் மற்றும் பலன்சியாகா ஷூக்களை அணிந்து வந்தார். இந்த ஆடையின் மதிப்பு சுமார் ரூ.80,000 என கூறப்படுகிறது.


அக்ஷய் குமாரின் இந்த  கிழிந்த ஆடையிலான தோற்றத்தை பார்த்த சிலர் ஆச்சரியப்பட்டாலும், ஃபேஷன் நிபுணர்கள் இது "லக்சரி கிரஞ்ச்" ட்ரெண்ட் என்று  விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த புதிய ஆடை இளைஞர்களை குறிவைத்து படத்தை சந்தைப்படுத்தும்  திட்டம்  என்றும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் தற்போது அக்ஷய் குமார் இந்த கிழிந்த ஆடை வைரலாகி வருகின்றது. மேலும் அக்ஷய்குமார் நடித்த பூத் பங்களா படத்தின் டிரெய்லர் 5 கோடி பார்வைகளை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement