• Apr 12 2026

திரிஷாவின் திரை வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா.? உறுதி செய்த தயாரிப்பாளர்கள்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் திரிஷா கிருஷ்ணன். இவர் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார். 40 வயதைக் கடந்த போதும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த நிலையில், தனது கணவருக்கு பிரபல நடிகையுடன் தவறான உறவு இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தனர். அது திரிஷாதான் என பலரும் விமர்சித்து அவருக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.

இதைத் தொடர்ந்து திரிஷாவின் ஒவ்வொரு அசைவும், நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர் கோயிலுக்குச் செல்லும்போது தனது செல்லப் பிராணியை அழைத்துச் சென்ற விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதைத் தொடர்ந்து நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விலகப் போவதாக சில நாட்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனினும் இது தொடர்பில் திரிஷா தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், "நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விலக உள்ளதாக வரும் செய்திகள் உண்மைதான். இது தொடர்பில் சமீபத்தில் சில தயாரிப்பாளர்கள் என்னிடம் உறுதி செய்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

மூத்த நடிகர் சித்ரா லட்சுமணன் திரிஷா சினிமாவிலிருந்து விலகுவது உறுதி என்று கூறியிருப்பதால், இது உண்மையாக இருக்கும் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

அதே நேரத்தில் விஜய் தற்போது அரசியலில் நுழைந்துள்ளதால், திரிஷாவும் அரசியலில் நுழையத்தான் இவ்வாறான முடிவை எடுத்திருப்பார் என்றும் கருத்துகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement