• May 21 2024

அவர் கிட்ட பேசிட்டோம் அவருக்கும் ஓகே என்ற மாதிரி தான் சொன்னாரு- விஜய்யை வைத்து புதிய படத்தை தயாரிக்கும் நடிகர் ஜுவா- சூப்பர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 100வது விஜய்யை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக ஜுவா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் ,பிரகாஷ் ராஜ், குஷ்பு என பிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர்.


மேலும் இப்படத்தின் ஷுட்டிங்கிலிருந்து அடிக்கடி போட்டோக்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால் படக்குழு கடுமையான சட்ட திட்டங்களை விதித்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.அத்தோடு இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் விஜய்யின் புதிய படம் குறித்து ஜுவா பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது அதாவது ஜுவாவின் தந்தை  நடத்தி வரும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஜுவா தெரிவித்துள்ளார்.


இதனால் லோகேஷின் படத்திற்கு பிறது தளபதி 68 பெரும்பாலும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பிலேயே விஜய் நடிப்பார் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement