• Mar 26 2023

“இங்கு வரும் போது ஒரே விடயம் தான் நினைத்தேன்..”-சிம்பு உருக்கம்

Aishu / 6 days ago

Advertisement

Listen News!

கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் சிம்பு  நடித்துள்ளார்.கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று நடந்த இசைவெளியீட்டில் சில விசயங்களை சிம்பு கூறியிருந்தார்.அதாவது நான் இங்கு வரும் போது ஒரே ஒரு விடயம் தான் என் மைண்டில ஓடிக்கொண்டிருந்தது, அது என்னவென்றால் இங்கு வந்து அழுதிடக்கூடாது என்று. 

நான் சரியான எமோஷனல் ஆள் சினிமாவில் சின்ன எமோஷனல் சீனை பார்த்தாலே அழுகிற கேரக்டர் ஆனால் இங்கு ஏன் அழக்கூடாது என்று நினைத்தேன் என்றால் உங்களுக்காக நான் அழக்கூடாது

ஏனென்றால் இவ்வளவு நாள் அந்த கஸ்ரத்தை எல்லாம் நாம் பார்த்தாச்சு எனக்காக நீங்கள் தாங்கிகொண்டிங்க இனிமேல் நீங்க சந்தோசமாக இருக்கணும் நீங்க சிரிக்கணும்அந்த சோக சீன் எல்லாம் முடிஞ்சிருச்சு, இனிமேல் சந்தோஷமான சீனுக்கு வருவோம். 


இதில எனக்கு என்ன சந்தோஷம் என்றால் இதே நேரு ஸ்டேடியத்திற்கு நான் பல தடவைகள் வந்திருக்கேன், ஆனால் மற்றவர்களுக்கு கூடிய கூட்டத்தைத்தான் பார்த்திருக்கேன் இப்போதுதான் எனக்காக கூடிய கூட்டத்தை பார்க்கிறேன் என்றார், இதற்காக பல ஊர்களில் இருந்து எனக்காக வந்திருக்கிறீர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement