• Jan 15 2025

அழுது புலம்பும் பாக்கியா... குற்றவுணர்ச்சியில் அமிர்தா... எழிலின் அடுத்த நடவடிக்கை என்ன ?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலாகும். தற்போது இந்த சேரியலுக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலின் இன்றைய நாளுக்கான எபிசோட் தொடர்பாக பார்ப்போம் வாங்க.


பாக்கியா விழுந்து விழுந்து அழுகின்றார். வெளியே வந்த ஈஸ்வரி அவன போக விட்டுட்டீங்களா என பேசியதோடு மட்டுமில்லாமல் பாக்யாவிடம் சென்று ஏன் இப்படி செய்தாய்? நான் சொன்னதில்லை என்ன தப்பு இருக்கு? உன்னால தான் அவன் வீட்டை விட்டு போயிட்டான் என பேசுகிறார்.


பாக்கியா ஒறுப்பக்கம் அழுதுகொண்டே "மனத்தோட வாழணும்னு சொல்லி கொடுத்து வளத்தேன் அதுவே கடைசில என் பையன வெளிய அனுப்பிருச்சு, எனக்கு ஒண்ணுன்னா ஓடிவந்து நிப்பான் அந்த பையன என் வாயாலையே வெளிய போனு சொல்லிட்டேன். யாருமே அவனை கூப்பிடவேணாம் என்று கூறுகிறார். இதனைக்கேட்டு எல்லோரும் பாக்கியாவை சமாதானம் படுத்துகின்றனர். கோபியின் அப்பா பாக்கியாவை பார்த்து அவன் வெளிய போன எப்படி நல்லது நடக்கும் என்று நம்புற என்று கேட்கிறார். 


அதற்கு பாக்கியா நல்லது நடக்கும் மாமா அவன் என்ன செய்யபோறங்கிற என்கிட்டே சொல்லி இருக்கான் மாமா இந்த வீட்டுல இருந்தா அது ஒன்னுமே நடக்காது மத்தவங்க சந்தோஷத்துக்காக அவனோட கனவுகளை தொலைச்சிருவான். அத்தை சொல்லுரதுலையும் ஒரு ஞாயம் இருக்கு ஆனா அவன் கனவுகளை நோக்கி பயணிக்கணும் அவன் வெளிய போகட்டும் என்று சொல்லி அழுகிறார். அவன் மறுபடி வருவான் இயக்குனர் எழிலா வருவான் என்று சொல்லிறார்.


எழில் மற்றும் அமிர்தா,நிலா ஆகியோர் ஹோட்டல் ரூம் ஒன்றிற்கு செல்கின்றனர். அப்போது நிலா யார் வீடு என்று கேட்கிறார். இது ஒரு ஹோட்டல் நாங்க கொஞ்ச நாள் இங்க ஜோலியா இருந்துட்டு போகலாம் என்று கூறுகிறார். அப்போது அமிர்தா எப்படிங்க எதுமே நடக்காத மாதிரி இருக்கீங்க என்று கேட்க எல்லாம் பாத்துக்கலாம் அமிர்தா என்று கூறுகிறார்அத்தோடு இன்றைய நாளுக்கான எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement