இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி ஒழுங்கமைத்த இடத்தில் தண்ணீர் தேங்கியது.
இதனால் குறித்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாததால் பெரும் அவதிப்பட்டனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ரஹ்மான், நிகழ்ச்சி வேறொரு நாளில் நடக்கும் என அறிவித்தார்.
அந்தவகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் நேற்றைய தினம் மறக்குமா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு மொத்தமாக 35 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் விற்கப்பட்டது கிட்டத்தட்ட 2 முதல் 3 லட்சம் டிக்கெட்டுகளாம். இதனை அடுத்து அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் பலரும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்தனர். அந்தவகையில் ப்ளூ சட்டை மாறனும் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதாவது "ரசிகர்கள் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு உரிய பணத்தையும் இழப்பீட்டையும் ஏ.ஆர். ரஹ்மான் சரி செய்து கொடுக்க வேண்டும் " என ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் "நேற்று நள்ளிரவு முதல் ரசிகர்கள் தங்கள் குமுறல்களை ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியை முடித்த களைப்பில் இன்னுமா தூங்குறீங்க, தூங்கியது போதும் எழுந்திரிங்க, ரசிகர்களின் கேள்விக்கு ட்வீட் எல்லாம் போடாமல் அட்லீஸ்ட் ஒரு வீடியோவிலாவது மன்னிப்பு கேளுங்கள்" எனவும் ஏ.ஆர்.ரகுமானை தாறுமாறாக விளாசியுள்ளார்.
Listen News!