இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாடல்களாலும், இசையாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளராக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாது சமீபகாலமாக பல இசைக்கச்சேரிகளையும் நடாத்தி வருகின்றார்.
அந்த வகையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் இவரின் மறக்குமா இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இதனால் பெரும் ஆர்வமுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதற்கு காரணம் அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள்தான். அதாவது இந்த கச்சேரிக்கு மொத்தமாகவே 35 ஆயிரம் டிக்கெட்ஸ் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இவர்கள் சுமார் 2 முதல் 3 லட்சம் டிக்கெட்ஸ்களினை விற்றிருந்தனர்.
இதனால் குறித்த இசைக்கச்சேரி நடந்த இடத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக கோல்ட் டிக்கெட் ரூ. 2000, பிளாட்டினம் மற்றும் டைமண்டு போன்ற டிக்கெட்களின் விலை ரூ. 5000 அதற்கும் மேல் என டிக்கட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இருப்பினும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யார் யார் எந்தெந்த டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்பதைக் கவனிக்காமல் 35 ஆயிரம் பேர்களை மட்டுமே உள்ளே அனுமதித்துள்ளனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்கவில்லை. இதனால் டிக்கட் வாங்கிய ஏனையோர் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் தற்போது ஏ.ஆர் ரகுமான் மற்றுமோர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது "அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கிவிட்டு, சில தவிர்க்க முடியாத காரணத்தால் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள், தாங்கள் வாங்கிய டிக்கெட் காப்பியை [email protected] என்கிற மெயிலுக்கு அனுப்புங்கள். எங்கள் குழு உங்களுக்கு விரைவாக உதவுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents
Listen News!