பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் கடந்த வாரம் மாரடைப்பினால் மரணம் அடைந்தார். இவரது பிரிவு முழு சினிமா உலகையும் உலுக்கி போட்டது. மேலும் பாரதிராஜா பழைய நிலைக்கு இன்னும் திரும்பாதது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து இவரது மரணம் குறித்து பல செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் தற்போது பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் தனது அண்ணா குறித்து பேசியுள்ளார். நேற்று பாடகர் கங்கை அமரன் பாடல் பாடி சமாதானப்படுத்திய வீடியோக்கள் வைரலாகியிருந்தன. ஆனாலும் அவர் தரப்பிலிருந்து அவர் பழைய மாதிரி மாறியதாக எதுவித செய்தியும் கிடைக்கவில்லை.
இந்த மனோஜின் சித்தப்பா "எங்க அண்ணன் தான் ரொம்ப மோசமான நிலைமையில் இருக்காரு. பிள்ளை மேல அப்படி உசுர வைத்திருந்தார். சில நேரங்களில் மனோஜ் உயிரோடுதான் இருக்கான் என்று அவருக்கு தோணுது. திடீர்னு மனோஜ கூப்பிடு என்று சொல்றாரு. வரவங்க கிட்ட சொல்லி சொல்லி அழுது அழுது ஒரு மாதிரியா ஆயிட்டாரு. அவரை சமாதானப்படுத்துவது, தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. மத்தவங்களை எல்லாம் ஏதோ கொஞ்சம் சமாதானப்படுத்தி விடலாம் ஆனால், அவரை சமாதானப்படுத்த முடியல. எப்ப பாத்தாலும் மனோஜோட போட்டோவை பார்த்து அழுதுகிட்டே இருக்காரு" என கூறியுள்ளார்.
Listen News!