• May 19 2024

மனுஷன் வெயிட்டைக் குறைச்சது சரி தான் என்ன நடிப்புடா சாமி- வெந்து தணிந்தது காடு படம் குறித்து கூல் சுரேஷ் கூறிய விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இதுவரை பார்த்திடாத சிம்புவை வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் பாத்திடலாம் என கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

எந்தத் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அப்படத்தை பார்த்து விட்டு படம் குறித்த சுவாரஸியமான விமர்சனங்களைத் தெரிவித்து வருபவர் தான் கூல் சுரேஷ். இவர் இன்றைய தினம் வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை பற்றி என்ன கூறப் போகின்றார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


 இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே தியேட்டரில் முதல் காட்சியை ரசிகர்களுடன் ரசிகராக உட்கார்ந்து பார்த்தார் கூல் சுரேஷ்.மற்ற படங்களுக்கு பெரும் ஆர்ப்பாட்டமாக வெளியே வந்து பேட்டி கொடுத்து வந்த கூல் சுரேஷ் இந்த முறை வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்து விட்டு ரொம்பவே அமைதியாக இருந்தார். 

அவரிடம் ரசிகர்கள் ஏன் இப்படி டல்லா இருக்கீங்க, 3 மணி நேரம் லெந்த் என்பதால் தூங்கிட்டீங்களா என்பது போல கேட்க, இது STRன்னு கத்துற படம் இல்லை, STRன்னு மைல்டா அவரது நடிப்பை ரசிக்கிற படம்னு ரொம்பவே ஃபீல் பண்ணி பேசிய வீடியோ யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.


வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என பேசி சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானவர் கூல் சுரேஷ். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து விட்டு என்ன சொல்ல விரும்புறீங்க என்கிற கேள்வியை முன் வைத்ததும், வெந்து தணிந்தது காடு பார்ட் 2வுக்கு வணக்கத்த போடு என பேசியுள்ளார். படம் நல்லா போச்சுன்னா பார்ட் 2 வரும் என ஏற்கனவே கெளதம் மேனன் சொல்லி இருந்தார்.

இதுவரை பார்த்திராத புதிய சிம்புவை இந்த படத்தில் பார்க்கலாம். இதுக்காகத்தான் மனுஷன் அப்படி வெயிட்டை குறைத்து நடித்தார் என்பதை நினைக்கவே ரொம்ப பெருமையா இருக்குன்னு கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு படத்தையும் அதில் வித்தியாசமாக நடித்துள்ள சிம்புவையும் பாராட்டி பேசியுள்ளார்.

நடிகர் சிம்புவுக்கு எப்போ திருமணம் என்கிற கேள்வியை கூல் சுரேஷிடம் முன் வைக்க, விரைவில் திருமணம் செய்து கொள்வார், அது தொடர்பான அறிவிப்பை சிம்புவே வெளியிடுவார். ஆனால், அதுபற்றி எல்லாம் அவரிடம் நான் பேசுவதே கிடையாது என பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement