• May 06 2024

மீண்டும் மகன்களின் முகங்களைக் காட்டிய விக்கி... ப்பா என்ன ஒரு அழகு... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் என்னும் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் நண்பர்களாக அறிமுகமாகிய இவர்கள் பின்னர் காதலித்து இந்த ஆண்டு பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். 


திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றனர். அவர்களுக்கு உயிர், உலக் எனப் பெயரிட்டு மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.


சமூக வலைத்தளங்களில் ஆர்வம் மிக்க விக்கி தன் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை பதிவிடடு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றார். அந்த வகையில் தற்போதும் மனைவி மகன்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார்.


அப்புகைப்படத்தில் விக்கி-நயன் உடைய மகன்களின் முகம் சற்று தெளிவாக தெரிகிறது. இதனால் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement