சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து அண்மையில் மாரடைப்பு காரணமாக திடீரென இறப்புக்குள்ளானார்.
இதை தொடர்ந்து, எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் பாத்திரத்திற்கு ராமமூர்த்தி நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார்.
இந்த நிலையில், ராணுவத்தில் இருந்த போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் வேல ராமமூர்த்தி.
அதன்படி அவர் கூறுகையில், ஒரு நாளைக்கு 32 சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு 25 கி.மீ. தூரம் ஓடுவேன். அண்டா அண்டாவா கறியும் இருக்கும். அந்த கறியை செக் செய்து சீல் வைத்துதான் அனுப்புவார்கள்.
நான் 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்த போது 5 அடி 4 அங்குலமாக இருந்தேன். 6 மாத பயிற்சிக்கு பிறகு 5 அடி 10 அங்குலமாக வந்தேன். 6 மாதம் கழித்து ஊருக்கு வந்து நான் தெருவுக்குள் நடக்கும் போது என்னடா மாப்ள தெருவே டங்கு டங்குனு இருக்குன்னாங்க.
எங்கள் ஊரில் கடலில் இருந்து ஓலைப்பெட்டியில் பெரிய மீன்கள் வரும். அதில் எங்கள் வீட்டுக்கு என தனியாக கொடுத்து விடுவார்கள். அது போல்தான் கறியும் கொடுத்துவிடுவார்கள்.
பிராய்லர் கோழியே கிராமங்களில் இருக்காது. இதனால் எனக்கு நகரத்துக்கு வந்தால் எங்கே ஆட்டுக்கறியுடன் ஏதாவது கறியை கலந்துவிடுவார்களோ என பயம் என கூறியுள்ளார்.
Listen News!