• May 22 2024

அந்த பொண்ணு என் உசுரு.. என் மூச்சு.. விஷாலின் ‘ரத்னம்’ டிரைலர்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகிய ‘ரத்னம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் ட்ரெய்லர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஹரியின் மற்ற படங்கள் போல் இந்த படத்திலும் அதிரடி ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது. தமிழ்நாடு ஆந்திரா பிரிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள், காதலி பிரியா பவானி சங்கருக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு விஷால் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுப்பது உள்ளிட்ட காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இருக்கும் நிலையில் கதை சற்று வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



‘தாமிரபரணி’ ’பூஜை’ ஆகிய படங்களுக்கு பின் மீண்டும் விஷால் - ஹரி கூட்டணி இணைந்துள்ள நிலையில் இந்த கூட்டணி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தேவிஸ்ரீ  பிரசாத் இசை இந்த படத்திற்கு முதுகெலும்பு போல் உள்ளது என்பதும் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பின்னணி இசை சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் கௌதம் மேனன், சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் சமுத்திரகனி மீண்டும் ஒரு ஆவேசமான வில்லன் கேரக்டரில் நடித்து உள்ளார் என்பதும் இந்த ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் மீண்டும் ஒரு வெற்றி படத்தை தான் ஹரி இயக்கி உள்ளார் என்பது இந்த ட்ரெய்லர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.




Advertisement

Advertisement