• Jan 22 2026

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.. ரஜினி வெளியிட்ட பதிவு

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், நேற்று (டிசம்பர் 12) தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தற்பொழுது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அவரது இந்த நன்றி தெரிவிப்பு தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ஊடகத் துறையினர் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை குவித்தனர். இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் திரு எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோருக்கும் ரஜினிகாந்த் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார். 


தனது நன்றி பதிவில் ரஜினிகாந்த், “என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி திரு கே.பழனிச்சாமி அவர்களுக்கும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியிருந்தார்.

Advertisement

Advertisement