• May 11 2024

பிரபல இயக்குநருடன் மீண்டும் இணையும் விக்ரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமான மாஸ் நடிகர் தான் விக்ரம்.

இவ்வாறுஇருக்கையில் இவர் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது.

இதன் பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.

இந்நிலையில் இப்போது ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று கூறுப்படுகின்றது.இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இவ்வாறுஇருக்கையில் விக்ரம் மீண்டும் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக ஏ ஜி எஸ் விக்ரம் கூட்டணியில் உருவாக இருந்த படத்தை கோமாளி இயக்குனர் பிரதீப் இயக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement