• Apr 28 2024

கவர்ச்சி வீடியோ வெளியிட்டு குழந்தை ரியாக்சன் கொடுத்த ஸ்ருதி…வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் மூத்த மகளான இவர் பாடகி, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஒருவராக விளங்கி வருகின்றார். திரையுலக பயணத்தின் தொடக்கமாக இவர் 2000-ஆம் ஆண்டில் வெளியான 'ஹே ராம்' என்ற படத்தில் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து சோகன் சா இயக்கத்தில் உருவான 'லக்' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் பெரியளவிலான தோல்வியையே சந்தித்திருந்தது. பின்னர் 2011- இல் சூர்யாவுடன் இணைந்து 'ஏழாம் அறிவு' என்ற படத்தில் நடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை பல படங்களில் நடித்து வருவதோடு டாப் நாயகியாகவும் முன்னேறியிருக்கின்றார்.

இவ்வாறாக சினிமாவில் பிஸியாக இருந்து வரும் ஸ்ருதி தற்போது புகைப்பட கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் பெங்களூரில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமன்றி அவ்வப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றியும் வருகிறார்கள். இதனால் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சினிமா வட்டாரங்களால் கூறப்பட்டு வருகிறது.

இவ்வாறாக சந்தோசமாக இருந்து வரும் இவர் ஒருநாள் தனக்கு தீராத PCOS பிரச்சனை இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். அதற்கு ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு கூறியிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து இவர் உடற்பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

சமீபகாலமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையே வெளியிட்டு வந்த இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான ஓர் உடையணிந்து வீடியோ ஒன்றினை பதிவிட்டிருக்கின்றார். அதுமட்டுமன்றி அதற்கு பின்னணி ஓடியோ ஒன்றிணையும் வைத்து குழந்தை போன்று ரியாக்ஷன் கொடுத்திருக்கின்றார்.

இவ்வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ் ஐ அள்ளிக்குவித்து வருவதோடு தமது கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement